2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கோடாரி கொத்துக்குள்ளானவர் உயிரிழப்பு

Thipaan   / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

குப்பிளான் வடக்கு பகுதியில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற கோடாரி கொத்துத்தாக்குதலில் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர், ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

மைத்துனர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட சிறுபிரச்சினை ஒன்று வாய்த்தர்க்கமாக மாறியது. இதில் இரத்தினம் நகுலேஸ்வரன் என்ற நபர் சம்பவ தினமன்று மாலை 5 மணியளவில் ஜீவராஜ் என்ற நபரை வீட்டுக்கு அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். இதன்போது இரத்தினம் நகுலேஸ்வரன் அருகில் இருந்த கோடாரி எடுத்து ஜீவராஜை சரமாரியாகக்  கொத்தியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X