2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காணி கையளிப்பு நிகழ்வு

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடந்த 25 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளை, உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, தெல்லிப்பழை பிரதேச செயலக மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (22), காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X