2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காணி சுவீகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தீவகத்தில் மூன்று பகுதிகளில் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பிரதேச நிலவை அலுவலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (08) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தீவகத்தில் மூன்று பகுதிகளில் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் எனவும், இதற்கான நில அளவை இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெறும் எனவும் அறிவித்தல் விடுக்கபட்டிருந்தது.

இதற்கமைய இன்று காலை நில அளவை அலுவலகத்துக்கு முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், நில அளவை திணைக்கள அதிகாரிகளை அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல விடாது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

சம்பவத்தின் போது ஆர்ப்பாட்;டக்காரர்களுடன் உரையாடிய நில அளவை அதிகாரிகள், 'இச்சுவீகரிப்பை முற்றாக நிறுத்துவதற்கு எமக்கு அதிகாரம் இல்லை. எனினும், இன்றைய தினம் அளவை செய்யச் செல்லவில்லை. எமது மேலதிகாரிகள் தெரிவித்தால் மாத்திரமே எம்மால் அளவை செய்வதை நிறுத்தமுடியும்' என தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாணசபை உறுப்பினர்களான க.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X