2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காணிப்பிணக்குகளால் அதிக வேலைப்பழுக்கள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணிப்பிணக்குகள் அதிகளவில் காணப்படுவதாகவும் இதனால் அலுவலகங்களில் அதிக வேலைப்பழுக்கள் காணப்படுவதாக மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவில் காணிப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றை தீர்ப்பதில் மிகவும் சிக்கல்கள் காணப்படுகின்றன. வார நாட்களில் அதிகளவானவர்கள் காணிப்பிரச்சினைகளுக்காகவே வருகை தருகின்றனனர். இவ்வாறான பிரச்சினைகளால் அலுவலகங்களில் அதிக வேலைப்பழுக்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காணி ஆவணங்கள் பெற்றுக்கொள்வதற்கான சேவைகள் எவையும் மேற்கொள்ளப்படாமையினால் ஏராளமான காணிகள் அதன் உரிமை மாற்றங்கள் செய்யப்படாமல் காணப்படுகின்றன.

இதனால் குடும்பங்களிடையே அல்லது இரு நபர்களுக்கிடையே அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடையே பிணக்குகள் காணப்படுகின்றன. இவ்வாறான காணிப்பிணக்குகள் காரணமாக பொலிஸ் நிலையங்களில் அதிகளவான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், காணி உரிமைகள் தொடர்பான வழக்குகள் அதிகளவில் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள், காணிப்பயன்பாடுகள் மற்றும் மீள் குடியேற்றத்தின் தாமதங்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடலொன்று, கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வடக்கில் காணிப்பிணக்குகளே அதிகளவிவே காணப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X