2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காணாமற்போனோருக்கான மரணச்சான்றிதழ், நட்டஈடு பெறலாம்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'காணாமற்போனோர் தொடர்பான மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும்' என காணாமல்போனோரின் உறவினர்களிடம், காணாமற்போனரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் கலந்துகொண்ட காணாமற்போன உறவினர்களிடமே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவ்வதிகாரிகள், 'நீங்கள் விரும்பினால் மரணச் சான்றிதழ் எடுக்கலாம். அதன் மூலம் நட்டஈடும் பெற்றுக்கொள்ளலாம். அதற்காக நாங்கள் விசாரணையை கைவிடமாட்டோம். நாங்கள் தொடர்ந்தும் விசாரிப்போம். எங்கள் விசாரணைகளில் உங்கள் பிள்ளைகள் கிடைக்கப்பெற்றால், மரணச் சான்றிதழை இரத்துச் செய்வோம். ஆனால், வழங்கிய நட்டஈட்டைத் திரும்ப கேட்கமாட்டோம்' என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X