Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பில் தங்களிடம் பட்டியல் இருப்பதாக 58ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் ஒப்புக்கொண்டுள்ளமை முதன்முதலாக நடைபெற்ற சம்பவம். இது மகிழ்ச்சியைத் தருகின்றது என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் சின்னத்துரை சசிதரன் (எழிலன்) உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிமன்றத்தில் 58ஆவது படைப்பிரிவில் பிரிகேடியர் மன்றில் ஆஜராகி, சரணடைந்தவர்களின் பெயர் விவரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ஆனால், மனுத்தாக்கலில் உள்ளவர்களின் பெயர்கள் இல்லையெனக் கூறினார். இதன்போது, அந்தப் பட்டியலை அடுத்த வழக்குத் தவணையில் கொண்டு வருமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பில் அனந்தி கருத்துத் தெரிவிக்கையில்,
காணாமற்போனோர் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தோம். அந்த அடிப்படையில், சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பில் பெயர் பட்டியல் இருப்பதை இராணுவம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
பட்டியல் கொண்டுவருவதற்கு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையால், மனுத்தாக்கல் செய்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் வரும் என்ற அச்சமும் உள்ளது. எனக்கு நீதி கிடைக்காவிட்டாலும், காணாமற்போன மற்றவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதற்காக இறுதி வரையில் நான் பாடுபடுவேன் என்றார்.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago