Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூன் 27 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வேலணை, 5ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாளியினை எடுக்க முற்பட்ட யுவதி தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து திங்கட்கிழமை (27) உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் சோமசேகரம் கோசலா (வயது 20) என்ற யுவதியே நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை தீவகத்துக்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி எஸ்.தியாகராஜா மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .