2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கைது செய்யப்பட்டவரை காணவில்லை

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'இறுதி யுத்தத்தின் போது காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற காந்தி என அழைக்கப்படும் நல்லையா மகேஸ்வரன் என்பவர் தொடர்பில்  இதுவரை எவ்வித தகவலும் இல்லை என அவரது மனைவி பிரபாலினி, கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் சாட்சியமளித்தார்.

விடுதலைப்புலிகளின் அமைப்பில் புலனாய்வுத்துறையில் பணியாற்றிய நல்லையா மகேஸ்வரன் (காணாமற்போகும் போது 42 வயது) இறுதியுத்தத்தின் போது காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர்  காட்டிக் கொடுக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

எனினும், இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை. தற்போது அவர் இருக்கிறாரா? இல்லையா என தெரிவிக்க வேண்டும்' என அவரது மனைவி சாட்சியமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X