2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

க.பொ.த பரீட்சையில் கடமையாற்றுவோருக்கான அறிவூட்டல் கருத்தரங்கு

Gavitha   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நிலையத்தில் கடமையாற்றுவோருக்கான அறிவூட்டல் கருத்தரங்கு எதிர்வரும் புதன்கிழமை (30) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் உயர்தரப்படசாலையில் இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் யாழ்ப்பாண வலயம், தீவக வலயம், தென்மராட்சி  வலயம் ஆகிய வலயங்களைச் சேர்ந்த பரீட்சையில் கடமையாற்றும் இணைப்பு நிலைய அலுவலர்கள், உதவி இணைப்பு நிலைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்கள்  ஆகியோரை பங்கு கொள்ளுமாறு யாழ்ப்பாண கல்வி வலய வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.தெய்வேந்திரராஜா அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கூறிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டால் மாத்திரமே, பரீட்சை கடமைகளில் கடமையாற்ற முடியும் எனவும் கல்விப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X