2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

குமுதினி படுகொலை நினைவஞ்சலி

George   / 2017 மே 15 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தின் நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற  படுகொலை சம்பவத்தை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த மக்களை  நினைவு கூரும் வகையில், மே மாதம் 12 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 18 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதி, முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சு.பசுபதிப்பிள்ளை, விந்தன் கனகரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் நெடுந்தீவு - புங்குடுதீவுக்கு இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள், கடற்படையினரால் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

குமுதினிப் படகில் சென்ற பயணிகள் 33 பேர், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, படுகொலை இடம்பெற்ற தினத்தில் குமுதினி படகில் கறுப்பு கொடி பறக்கவிடப்படப்படுவதுடன், இத்தினத்தில் குமுதினி படகு சேவையில் ஈடுபடுவதில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X