2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

குமுதினியின் நேர அட்டவணை மாற்றம்

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவுக்கும் - குறிகட்டுவானுக்கும் இடையில் கடல்வழி போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் குமுதினிப் படகின் நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி காலை 7.30, மற்றும் மாலை 2.30 மணிக்கு சேவையில் ஈடுபட்ட படகின் நேரம் மாற்றப்பட்டு முறையே காலை 6.30 மணி மற்றும் மாலை 3.00 மணி என மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி காலை 9.30 மணி மற்றும் மாலை 4 மணிக்கும் புறப்படும் படகு சேவை நேரம் மாற்றப்பட்டு, முறையே காலை 8.00 மணி மற்றும் மாலை 4.15 என மாற்றப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் வரும் வரையில் இந்தப் படகுசேவையின் நேர அட்டவணையானது இவ்வாறே அமைந்திருக்கும் என செயலாளர் அறிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X