2025 ஜூலை 19, சனிக்கிழமை

காயத்தை ஏற்படுத்திய நபருக்கு அபராதம்

George   / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

விபத்தின் மூலம் பெருங்காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான கெருடாவில் தொண்டமனாறு பகுதியினை சேர்ந்த நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், வியாழக்கிழமை (07) தீர்ப்பளித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட நபருக்கு 35 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக வழங்க நீதவான் இதன் போது பணித்தார்.

கடந்த டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி அச்சுவேலி நகரப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மேற்படி பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபரான சாரதிக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X