Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 29 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் மீது செவ்வாய்க்கிழமை (28) இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருதனார்மடம் கோப்பாய் ஊடாக வவுனியா நோக்கி காலை 4.30 மணிக்குச் சென்ற பஸ் மீது, உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் வைத்து, கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பஸ் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, பஸ் கண்ணாடி சேதமடைந்தது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மருதனார்மடம் கோப்பாய் ஊடாக முல்லைத்தீவுக்குச் சென்ற பஸ் மீதும், சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன்போது, பஸ் கண்ணாடி சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago