2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காரைநகர் சைவ மகா சபையை மீள இயங்க வைப்பதற்கு நடவடிக்கை

Niroshini   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

காரைநகர் சைவ மகா சபைக்கு புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்வதற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சபையின் கட்டடத்தில் நடைபெறவுள்ளதாக சபைத் தலைவர் டொக்டர் ப.நந்தகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'நூற்றாண்டு பெருமைமிக்க காரைநகர் சைவ மகா சபை செழுமையுடன் திகழ்ந்த கடந்த காலத்தில் மகாத்மா காந்தி, சுவாமி விபுலானந்தர் உள்ளிட்ட மகான்களும் ஜவகர்லால் நேரு, இந்திரகாந்தி, இராஜகோபாலாச்சாரியார் போன்ற உலகப் புகழ்பெற்ற தலைவர்களும் நேரடியாக வருகை தந்தனர்.
இப்படியான பெருமைபெற்ற இந்தச் சபையை தற்போது மீளமைத்து மீண்டும் ஆன்மீக, மனிதநேயப் பணிகளை முன்னெடுக்கவேண்டியது காலத்தில் கட்டாய தேவையாக உள்ளது. அந்தவகையில், இந்த சபைக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

புதிதாக அங்கத்துவம் பெற்றவர்கள் சபைத் தெரிவிலோ வாக்கெடுப்பிலோ கலந்துகொள்ள முடியும்.

இதனால், அங்கத்தவராக இணைந்துகொள்ள விரும்புவோர் காரைநகர் பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் அல்லது புனருத்தாரண சபையின் அங்கத்தவர்களிடம் படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தி எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கவேண்டும்' என்றார்.  

'காரைநகர் பிரதேசத்தை நிரந்தரமாக அல்லது தற்காலிக வதிவிடமாக கொண்ட அனைவரும் அங்கத்தவராக இணைந்துகொள்ள முடியும். பழைய அங்கத்தவர்கள் தமது அங்கத்துவத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

மேலும், காரைநகர் பிரதேசத்திலுள்ள ஆலய பரிபாலன சபைகள், அறநெறிப் பாடசாலைகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்துக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X