2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குருநகர் பகுதியில் வெடிமருந்து மீட்பு

Niroshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குருநகர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (06), 1.75 கிலோகிராம் நிறையுடைய தடை செய்யப்பட்ட ரி.என்.ரி வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு, கடற்கரையில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்தை மீட்டுள்ளனர்.

மீன்களை வெடிவைத்துப் பிடிக்கும் நோக்கில் இந்த வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும்  மீட்கப்பட்ட வெடிமருந்தை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X