2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கிராம அபிவிருத்தி அமைச்சர் கலந்துரையாடல்

George   / 2017 மார்ச் 28 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான, வலிகாமம் வடக்கு ஊறணி பகுதிக்கு, வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேரடியாகந் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இங்கு ஏறக்குறைய 193 குடும்பங்கள் மீள்குடியேறி பல்வேறு அசௌகரியங்களின் மத்தியிலும், நாளாந்த வருமானமின்றியும் வாழ்ந்துவருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்கு கடற்றொழிலையே மேற்கொண்டுவருகின்றனர். 27 வருடங்களின் பின்னர், மீள்குடியேறியுள்ள மக்கள் அடிப்படை கட்டுமான வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில், அபிவிருத்தித்திட்டங்களை அக்கிராமத்தில் முன்னெடுப்படதாகவும் உதவித் திட்டத்தில் நலிவுற்ற குடும்பங்களை உள்வாங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X