2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

குரங்குகளில் அட்டகாசத்திலிருந்து தப்பிய குழந்தை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி. விஜயவாசகன்

சாவகச்சேரி (தென்மராட்சி) பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள வீட்டில் ஏணையில் படுத்திருந்த குழந்தை குரங்குகளின் அட்டகாசத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை (19) தப்பியுள்ளது.

தாய் குழந்தையை ஏணையில் கிடத்திவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். இதன்போது, வீட்டின் கூரையின் மீது கூட்டமாக குரங்குகள் பாய்ந்தமையால், கூரையின் சீற்கள் உடைந்து, ஏணையைச் சுற்றி வீழ்ந்தன. இருந்தபோதும், ஒரு துண்டுகூட குழந்தை மீது விழவில்லை. இதனால் குழந்தை எவ்வித காயங்களுமின்றி தப்பியது.

சில காலத்துக்கு முன்னர் விவசாயத் திணைக்களத்தினால் தென்மராட்சிப் பிரதேசத்தில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிக்கப்பட்டு காடுகளுக்கு கொண்டு சென்று விடப்பட்டது. எனினும், குரங்குகளின் பெருக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பயிர்ச் செய்கை மற்றும் வீடுகளின் உபகரணங்கள் என்பன சேதமாக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X