2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காலபோக நெல் மிகக்குறைந்த விலையில் விற்பனை

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் தற்போது அறுவடை செய்யப்படும் காலபோக நெல்லை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (25) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

80 கிலோ கிராம் நெல், 1,300 ரூபாய்க்கு கூட விவசாயிகளிடமிருந்து தனியார் வர்த்தகர்களினால் கொள்வனவு செய்யப்படுவதன் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த சிறுபோகத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட 7,000 மெற்றிக்தொன் நெல் ஐந்து களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. மேலும், களஞ்சிய வசதிகள் இல்லாததன் காரணமாக நெல் சந்தைப்படுத்தும் சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை.

இதன் காரணமாகவே முல்லைத்தீவு விவசாயிகள் காலபோக நெற்செய்கையில் நெல்லினை மிகக்குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்று பெரும் நட்டங்களை எதிர்கொள்வதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X