2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொள்கைப் பரப்புக் கூட்டங்களை நடத்தும் தமிழரசுக் கட்சி

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழரசுக் கட்சி, தங்கள் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை பரப்பும் வகையில்,  தேர்தல் தொகுதிகள் தோறும் கூட்டங்களை நடத்தி வருகின்றது.

பருத்தித்துறை, உடுவில் மற்றும் கோப்பாய் பிரதேசங்களிலேயே இவ்வாறான கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய கூட்டங்களை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் இந்தக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது.

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகிய பின்னர் மக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையை போக்கும் முகமாக இந்த கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X