2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்துக்கான அரிசி இறக்குமதியை தடைசெய்ய வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்துக்கான அரிசி இறக்குமதியை தடைசெய்து மாவட்டத்தில் தேங்கியுள்ள நெல்லை விற்பனை செய்யுமாறு, வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, காலபோக நெல் அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால், நெல் சந்தைப்படுத்தும் சபையின் 10 களஞ்சியங்களிலும் 6,200 மெற்றிக்தொன் நெல் தேங்கியுள்ளதாக மாவட்டச் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

களஞ்சியங்கள் இல்லாததன் காரணமாக இவ்வாண்டு காலபோக நெல் விற்பனை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் களஞ்சியங்களிலுள்ள நெல்லை அரிசியாக்கி மக்களுக்கு விற்பனை செய்யுமாறும் மாவட்டத்துக்கான அரிசி இறக்குமதியை தடைசெய்யுமாறும் விவசாயப் பிரதிநிதிகளினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

காலபோக நெல்லை விற்பனை செய்வது தொடர்பான கூட்டமொன்று மாவட்டச் செயலார் தலைமையில் நடத்துவதெனவும் இக்கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் களஞ்சியங்களைப் பயன்படுத்துதல், நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியங்களில் தேங்கியுள்ள கடந்த ஆண்டுக்குரிய காலபோக, சிறுபோக நெல்லை எவ்வாறு விற்பனை செய்வது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X