2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் 70 சதவீதமான விவசாயக் குடும்பங்கள்

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 70 சதவீதமான குடும்பங்கள், விவசாயத்தை, தங்களது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 28 ஆயிரத்து 935 குடும்பங்கள், 58 ஆயிரத்து 35 ஏக்கர் வயல் நிலங்களிலும் 4 ஆயிரத்து 153 ஏக்கர் மேட்டு நிலங்களிலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், அறுவடைகளின் பின்னர் விவசாயப் பொருட்களை உரிய முறையில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயத்தை முன்னெடுத்து செல்வதற்கு இயற்கை காரணிகள் தடையாக அமைந்துள்ளதாகவும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 613 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .