2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கிளிநொச்சியில் உவர் நிலங்களில் நெற்செய்கை

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பு உவர்நிலமாக மாறியுள்ளபோதும் மிகக்குறைந்த உவர் தன்மை கொண்ட பகுதிகளில் விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.செல்வராசா திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.

கடந்த கால யுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் காணப்பட்ட உவர்நீர் தடுப்பணைகள் சேதமடைந்தமையால் உவர்நீர் உட்பகுந்து பெருமளவான பயிர்ச்செய்கை நிலங்கள், உவர்நிலங்களாக மாறியுள்ளதுடன் பயிர்ச் செய்கைகள் எதனையும் மேற்கொள்ளமுடியாத நிலையில் காணப்படுகின்றன.

இருந்த போதும் மிகக்குறைந்த உவர்த்தன்மை கொண்ட பயிர்ச் செய்கை நிலங்களில் விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 362 வர்க்கமுடைய நெல்லினம் 90 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, வன்னேரிக்குளம், உமையாளர்புரம், தட்டுவன்கொட்டி, கண்டாவளை, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1990 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பகுதிகளில் பயிர்செய்கை நிலங்களை பாதுகாக்கும் வகையில் காணப்பட்ட உவர் நீர் தடுப்பணைகள் சேதமடைந்த நிலையில் பயிர் செய்கை நிலங்களுக்குள் உவர் நீர் உட்புகுந்து நிலங்கள் உவரடைந்துள்ளன.

இதனால் பெருமளவான குடும்பங்கள் பயிர் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X