2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் கிரவல் வீதிகள் வேண்டாம்

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வீதிகள் அமைக்கின்றோம் என்று கிரவல் மண்னைக் கொண்டு கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வீதிகளால் பொதுமக்களுக்கு ஆஸ்மா, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. இதன்போது, உள்ளூராட்சி சபையின் கீழுள்ள வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற விவாதம் சபையில் எழுந்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த பசுபதிப்பிள்ளை,

வீதிகளில் தார் தெளிப்பது, சேதமடைந்த வீதிகளில் கல்லைப் போட்டு அதற்கு மேல் தாரை ஊற்றிவிட்டுச் செல்லும் ஏமாற்று வேலைகளைச் செய்யவேண்டாம். இந்த புனரமைப்பு நீண்டகாலம் நிலைத்து நிற்காது.

கிளிநொச்சியில் புனரமைக்கும் வீதிகளுக்கு கிரவல் போடப்படுவது நிறுத்தப்படவேண்டும். அத்துடன், வீதிகளின் அருகில் வடிகால்கள் அமைக்கப்படவேண்டும். வடிகால்கள் வீதியைவிட உயரமாகவுள்ளன. இதனால் மழை நீர் தேங்கி வீதிகள் பழுதடைகின்றன.

உள்ளூராட்சி மன்றங்கள் நிதிகளை மக்கள் அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல், வைப்பிலிட்டு நிரந்தர வருமானம் உழைக்கின்றனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X