2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கொள்ளை: பெண் உட்பட இருவர் கைது

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில,; பெண் உட்பட இருவரை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான விசேட பொலிஸ் குழு,வியாழக்கிழமை (17)  கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நகை, மடிக்கணினி, பத்து அலைபேசிகள், மீள் நிரப்பு அட்டைகள், முச்சக்கர வண்டிகளின் ஆவணங்கள்  என்பன மீட்கப்பட்டுள்ளன.

'39 வயது பெண் மற்றும் குறித்த பெண்ணின் சகோதரியின் மகனாகிய 18 வயது இளைஞன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளோம்' என கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

'அத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டவை' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X