2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கொள்ளையர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 26 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மானிப்பாய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (25) வழிப்பறிக் கொள்ளைகள் இரண்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரை, இன்று  செவ்வாய்க்கிழமை (26) காலை சந்தேகத்தின் பேரில், கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே, உடுவில் பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (25) காலை வங்கியில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி கழுத்தில் இருந்த 1 பவுண் சங்கிலி மற்றும் கைப்பை என்பன நவாலி பகுதியில் வைத்து கொள்ளையடிக்கப்பட்டது.

அதேபோல், மாலை பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்ற பெண்ணின் 2¾ பவுண் சங்கிலி பூட் சிற்றி ஒழுங்கையில் வைத்து அபகரிக்கப்பட்டது. 

இச்சம்பவங்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X