Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 22 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதியும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானாவின் பெயரை, கொழும்பிலுள்ள ஒரு முக்கிய வீதிக்குச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் செயலாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளதாவது,
மூத்த தொழிற்சங்கவாதியான அலவி மௌலானாவின 1948ஆம் ஆண்டு முதல் அப்பணியை திறம்படச் செய்வதில் சளைக்காது உழைத்தவர். 1956ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், தனது இறுதி மூச்சு வரை அதேகட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தவர். பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் பணியாற்றி, பின்னர் மேல் மாகாணத்தின் ஆளுநராக தொடர்ந்து 13 வருடங்கள் பதவி வகித்தவர்.
எல்லோருடனும் பண்புடன் பழகும் குணம் வாய்த்த மௌலானா, நாட்டின் மூவின மக்களினதும் அன்பினைப் பெற்றவராக விளங்கியவர். எவருமே குறை கூறாத வகையில் தனது நடத்தையைப் பின்பற்றிய ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து காட்டிய பெருமகன். மும்மொழி பாண்டித்தியம் பெற்ற அன்னார், மும்மொழிகளிலும் அடுக்கு மொழியில் கதைக்கும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டிருந்த சிறப்புக்குரியவர்.
அன்னாரைக் கௌரவிப்பதற்கு இந்த நாடு கடமைப்பட்டிருக்கிறது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .