2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பிலுள்ள பொறியியலாளர்களும் உதவ வேண்டும்

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

உலக வங்கியின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படவுள்ள யாழ். நகர தந்திரோபாய நடவடிக்கை என்னும் திட்டத்துக்கு கொழும்பிலுள்ள பொறியியலாளர்களும் உதவ வேண்டும் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு முதலமைச்சரின் அலுவலகத்தில், இன்று புதன்கிழமை (22) இடம்பெற்றது.

இச்சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, யாழ். நகர தந்திரோபாய நடவடிக்கை என்னும் திட்டத்துக்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியளிப்பதற்கு உலக வங்கியின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்துக்கு யாழில் உள்ள பொறியியலாளர்கள் மாத்திரமல்லாது, கொழும்பில் உள்ள பொறியியலாளர்களும் தமது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X