2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கூழாவடி காணி அளவீடுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஆனைக்கோட்டை, கூழாவடியில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணியை இராணுவ முகாமின் நிரந்தர தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த நிலஅளவை செய்யும் பணி, பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் கைவிடப்பட்டது.

மேற்படி பகுதியில் 5 பேருக்குச் சொந்தமான 16 பரப்பு காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்தக் காணியில் இராணுவத்தின் நிரந்தர முகாம் ஒன்றை அமைப்பதற்கென காணி சுவிகரிப்பதற்காக, நிலஅளவை மேற்கொள்வதற்காக நிலஅளவையாளர்கள் முகாமுக்குச் சென்றிருந்தனர்.

காணி அளவீட்டுக்கு, காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் செய்த எதிர்ப்புக் காரணமாக காணி அளவீட்டை கைவிட்ட நிலஅளவையாளர்கள் திரும்பிச் சென்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களாக பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் கஜதீபன் கருத்துத் தெரிவிக்கையில்,

'பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளுடன், மாற்றுவலுவுள்ள சிறுவர்களை பராமரிக்கும் சிவபூமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 2 பரப்புக் காணிகளையும் சேர்த்து, இராணுவம் அபகரிக்க இருந்தமையானது ஒரு மனிதாபிமானமற்ற செயல் ஆகும். இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்புத் தெரிவித்து காணி அளவீட்டை நிறுத்தியுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X