Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மே 07 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கபிலன் செல்வநாயகம்
காணாமல் போன முதியவர், கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்து, சனிக்கிழமை (06), சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி தெற்கு காளிகோயிலடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் சிவகுருநாதன் (வயது 77) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (04) இரவு, வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பாமையினால், உறவினர்கள், மறுநாள்காலை (05), அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
முதியவர், வீட்டை விட்டுச் சென்ற நேரம் துவிச்சக்கரவண்டியினை எடுத்து சென்றதாகவும் கையில் மோதிரம் ஒன்று அணிந்திருந்ததாகவும், உறவினர்கள், பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், அச்சுவேலி தொண்டமானாறு வீதியில் உள்ள மகிழடி வைரவர் கோவிலுக்குப் பின்னால் உள்ள கைவிடப்பட்ட காணியிலிருந்து, துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் அயலவர்கள் காணிக்குள் சென்ற பார்த்த போது, ஆண் ஒருவரின் சடலம் இருப்பதனை அவதானித்துள்ளனர்.
மேலும், முகம் உருக்குலைந்த நிலையில், குறித்த சடலம் காணப்பட்டதுடன், வாயில் இருந்து அதிகளவான இரத்தம், வெளியில் கசிந்திருந்துள்ளது.
இது தொடர்பில், அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்ட மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் நன்னியர் தம்பிமுத்து, மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
பின்னர், தடய அறிவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொலிஸ் விசாரணைகளின் பின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த நபர், கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போடப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago