2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கசிப்பு காய்ச்சுதலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் உள்ளனர்

Niroshini   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கரவெட்டிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துன்னாலைப் பகுதியில் இடம்பெறும் கசிப்பு காய்ச்சுதல், சட்டவிரோத மாடறுப்பு ஆகிய விடயங்களை கட்டுப்படுத்த முடியாமல் அரச அதிகாரிகள் உள்ளதாக கரவெட்டி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற சிவில் சமூகக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

துன்னாலைப் பகுதியில் குற்றச்சாட்டு தொடர்பில் ஒருவரைக் கைது செய்து, நீதிமன்ற தண்டனைக்குட்படுத்தினால், தண்டனை முடிந்த பின்னர் அந்நபர் செய்த விடயத்தையே மீண்டும் செய்கின்றார். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது. மேலும் அவர்கள் வன்முறைப் போக்காளர்களாக இருக்கின்றார்கள். இதனால் அரச அதிகாரிகள் கூட நடவடிக்கைகள் எடுக்கப் பயப்பிடுகின்றார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X