Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 19 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பகுதியில் கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜே.பிரபாகரன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார்.
750 மில்லிலீற்றர் கசிப்பு, 1,500 மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் 2,000 மில்லிலீற்றர் கசிப்பு ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவேளை, திருடிய மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இரண்டு நபர்களை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த இருவரும் பளைப் பகுதியில் திருடிய 3 மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லுபோது, பளைப் பொலிஸாரால் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், கோணாவில் பகுதியில் காளை மாடு ஒன்றை கடத்திச் சென்ற ஒருவரை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025