2025 ஜூலை 12, சனிக்கிழமை

கசிப்பு விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது

Gavitha   / 2015 நவம்பர் 26 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம், நாகநாதன் வீதியிலுள்ள வீடொன்றில் கசிப்பு விற்பனை செய்து வந்த இரண்டு பெண்களை புதன்கிழமை (25) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என்.பண்டார தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் 54 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 3775 மில்லிலீற்றர் கசிப்பையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .