2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

துன்னாலை கரவெட்டி மேற்குப் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை, சனிக்கிழமை (03) கைது செய்துள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான பெண், அதே பகுதியினைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து 76 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, மற்றும் 3 ஆயிரத்து 750 மில்லிலீற்றர் கசிப்பு என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X