2025 மே 14, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தி: ஒருவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

ஆவரங்கால் - வன்னியசிங்கம் வீதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபரொருவர், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் வன்னியசிங்கம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1,500 மில்லிலீற்றர் கசிப்பு இதன்போது கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்ய அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், காங்கேசன்துறை பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, நவகிரி பகுதியில் வைத்து 1,500 மில்லிலீற்றர் கசிப்புடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .