Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 22 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் ஓட்டு மடப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் ஆனைக்கோட்டை பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவன், செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான மாணவன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்விகற்பவர் என பொலிஸார் கூறினர்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓட்டு மடப் பகுதிக்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகநபரான மாணவனை கைதுசெய்ததுடன் 50 கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த மாவாவினை கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், விற்பனை முகவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
25 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
56 minute ago
1 hours ago