2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2016 ஜூலை 06 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை, நாவலடி பகுதியில் 45 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் கே.அரியநாயகம் புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.

செவ்வாய்கிழமை (05) யாழ் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார், 45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் வீட்டில் மறைத்து வைத்திருந்த போது கைது செய்திருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது வழக்கினை விசாரித்த நீதிவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X