2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் கைதானவரை தடுத்துவைத்து விசாரிக் அனுமதி

George   / 2016 நவம்பர் 04 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மாதகல் பகுதியில் 55 கிலோகிராம் கஞ்சாவுடன் கைதான இளைஞனை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குரிய அனுமதியினை இளவாலை பொலிஸாருக்கு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், வியாழக்கிழமை (03) வழங்கினார்.

கிடைக்கபெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் புதன்கிழமை (02) இரவு  மாதகல் கிழக்கு பகுதியிலுள்ள வீட்டை சுற்றிவளைத்த இளவாலை பொலிஸார், வீட்டின் அறையில் குழிவெட்டி பரல் ஒன்றில் மறைத்து புகை;கப்பட்டிருந்த 55 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டிருந்தனர்.

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரான 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபரையும் சான்றுப்பொருளையும் பொலிஸார், வியாழக்கிழமை (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

சந்தேகநபரை தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குரிய கட்டளையினை பொலிஸார் நீதவானிடம் கோரியிருந்தனர்.

பொலிஸாரின் கோரிக்கையினை ஏற்ற நீதவான், தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X