2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் பூசாரி கைது

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை, பனிப்புலம் பகுதியில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த பூசாரி ஒருவரை, நேற்றுப் புதன்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பூசாரியை விசாரித்த போது, அவர் பயத்தில் முன்னுக்கு பின் முரணானத் தகவல்களை கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரைச் சோதனை செய்தபோது கஞ்சா மீட்கப்பட்டது. 26 வயதுடைய  பூசாரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறு இருக்க, அல்வாய் முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவரும் புதன்கிழமை (03) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழான விசேட குற்றத்தடுப்புப் பொலிஸர் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரிடமிருந்து 4 கிலோவும் 100 கிராமும் நிறையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இரகசிய தகவலின் அடிப்படையில், கஞ்சா வாங்கும் முகவர் போல பாசாங்கு செய்து சென்றே பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X