2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

வட்டுக்கோட்டை மேற்குப் பகுதியில் 1,000 மில்லிகிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், நேற்றுப் புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர், கடந்த 10ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் 850 கிராம் கஞ்சாவுடன் 41 வயதுடைய நபரொருவரை, நேற்று (12) வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு கஞ்சாவை எடுத்துச் சென்று அங்கு வைத்து, அதனை கைமாற்றும் பொருட்டு கொண்டு செல்லும் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X