2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கடுகதி ரயிலில் மோதிய இராணுவ ட்ரக்

George   / 2017 மே 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், கி.பகவான்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயிலில், சங்கத்தானை பகுதியில்  வைத்து இராணுவத்தினரின் ட்ரக் வாகனம் இன்று பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது எவருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. காயமடைந்த வாகனச் சாரதியான பீ.எம்.ஜெயசிங்க (வயது 24), சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X