2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கட்சியின் தீர்மானம் பற்றி அனந்திக்கு சஞ்சலமில்லை

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

'கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக நடக்கவில்லையென எங்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் இருவரும் ஒன்றுபட்டு தீர்மானம் எடுப்போம்' என மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

கட்சியின் தீர்மானத்துக்கமைய செயற்படவில்லையென மகளிர் அணித் தலைவி அனந்தி சசிதரன் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் வி.சிவகரன் ஆகியோர், கட்சியின் மத்திய குழுவால் பதவி இறக்கம் செய்யப்பட்டு, தொடர்ந்து 3 வருடங்களுக்கு சாதாரண உறுப்பினர் வரிசையில் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளனர்.

இந்த தீர்மானம், வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மத்திய குழுத் தீர்மானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனந்தியிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து, தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'எங்கள் மீது ஒழுக்காற்று விசாரணை மற்றும் நடவடிக்கை எடுப்பதாக, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தீர்மானித்து, இழுபறிப்பட்டு தற்போது தான் முடிவை எடுத்துள்ளனர். எங்கள் மீது விசாரணை நடத்தும் போது, அனைத்துக்கும் எழுத்து மூலமான பதிலை நாங்கள் வழங்கியிருந்தோம். இதனால், இந்த தீர்மானம் தொடர்பில் சஞ்சலப்படத் தேவையில்லை. ஆனால், இன்னும் எனக்கு உத்தியோகபூர்வமாக இந்த தீர்மானம் குறித்து அறிவிக்கப்படவில்லை. அதனால், அது குறித்த  நடவடிக்கை பற்றி யோசிக்கவில்லை' என்றார்.  

'கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரையும் ஆதரிப்பதில்லை என நாங்கள் எடுத்துக்கொண்ட முடிவின் அடிப்படையிலேயே, இந்த ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டது' என்றும் அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X