2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கடிதம் வாங்கி சிகிச்சை செய்யும் வைத்தியர்

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

விபத்தில் காயமடைந்தவர் இரண்டு கடிதங்கள் தனக்கு தந்தால் மாத்திரமே சிகிச்சையளிக்க முடியும் என வைத்தியர் ஒருவர் தெரிவித்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை பி தர ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

விபத்தொன்றில் காயமடைந்த நபரொருவர், சிகிச்சைப் பெறுவதற்காக  ஊர்காவற்றுறை பி தர ஆதார வைத்தியசாலைக்கு சென்றபோது, வைத்தியர், எந்தவித உயிருக்கும் சொத்துக்கும் தன்னால்(குறித்த நபரால்) சேதம் விளைவிக்கவில்லையென்ற கடிதத்தை கோரியுள்ளார்.

இதையடுத்து, வைத்தியர் கோரிய கடிதத்தைக் கொடுத்ததும், விபத்தின் போது, பாதிக்கப்பட்ட மற்றைய நபரின் கடிதமும் வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இரண்டு கடிதங்களுக்கு கிடைத்த பின்னரே தன்னால் சிகிச்சையளிக்க முடியும் என அந்த வைத்தியர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர் இரத்தத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து, கடிதம் வாங்கிக் கொடுத்த பின்னரே சிகிச்சையை பெற முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X