2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கடத்தப்பட்ட மகனை கடற்படையினரின் சீருடையில் கண்டோம்

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடத்தப்பட்ட மகனை கடற்படையினரின் சீருடையில் உறவினர்கள் கண்டனர். அத்துடன் கடத்தப்பட்ட மகனை விடுவிக்க 1 இலட்சம் ரூபாய் பணத்தையும் வழங்கினேன். எனினும், மகன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என தாயார் ஒருவர் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் சனிக்கிழமை (27) கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு சாட்சியளித்தார்.

எனது மகன் அச்சுதன் வைகுந்தன் (கடத்தப்படும் போது வயது 22) வீட்டிலிருந்த போது 2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி இராணுவ சீருடையில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டார்.

கடத்திச் செல்லப்பட்டு 1 மாதத்தின் பின்னர் உறவினர்கள் நைனாதீவுக்குச் சென்ற போது அங்கு மகனை கடற்படையினரின் சீருடையில் கண்டனர். எனினும் உறவினர்கள் அவருடன் கதைக்க முற்பட்ட போது அவர் அங்கிருந்த முகாமுக்குள் சென்றுவிட்டார். பின்னர் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என்றார்.

'2013ஆம் ஆண்டு மகன் ஜோசப் முகாமில் இருப்பதாக கடிதம் ஒன்று வீட்டுக்கு வந்தது. அவரை விடுவிப்பதற்கு 1 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய  கைதடியிலுள்ள இராணுவத்தினருக்கு நெருக்கமான ஒருவர் எம்மிடம் பணத்தை பெற்றுக் கொண்டார். எனினும் மகன் விடுவிக்கப்படவில்லை. தற்போது பணத்தை பெற்றுக் கொண்டவர் தலைமறைவாகி விட்டார். தற்பொது பணமுமில்லை மகனுமில்லை' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X