Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், பள்ளிமுனை கிராமத்தில் இருந்து சனிக்கிழமை(13) காலை, கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமானது கண்டிக்கத்தக்கது. எனவே இச்சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் சுதந்திரம் ஏற்பட்டுள்ள போதும் எமது வட பகுதி மீனவர்கள் இன்று வரை சுதந்திரமாக கடற்தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
அந்த வகையில், பள்ளிமுனை மீனவர்கள் இருவர் மீது கட்ற்படையினர் சனிக்கிழமை(13) காலை இரணை தீவு கடற்பகுதியில் வைத்து மேற்கொண்டுள்ள கத்தி வெட்டுச் சம்பவமானது மிளேச்சத் தனமானது.
இதில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களும் தற்போது மன்னார்,யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுழி ஓடி மீன் பிடியில் ஈடுபட்ட இரு மீனவர்களை எவ்வித காரணங்களும் இன்றி கடற்படை கைது செய்து முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மீனவர்கள் கடலில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களை கடற்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியும்.
ஆனால் கடற்படையினர் அதிகாரத்தை கையில் எடுத்து மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்குதல்,அவர்களை வெட்டுதல் போன்ற மனித உரிமை மீரல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago