2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடலுணவு ஏற்றுமதி ஊழியர்கள் போராட்டம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்டத்தின் கடலுணவுகளை உத்தியோகபூர்வமற்ற முறையில் உள்ளூர் தரகர்கள் மூலம் சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதை தடுத்து நிறுத்தி, உள்ளூர் ஊழியர்களின் நலனைப் பேணுமாறு கோரி யாழ். மாவட்ட கடலுணவு ஏற்றுமதி ஊழியர்கள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகத்துக்கு, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.

வடக்கில் இரு நிறுவனங்கள் இவ்வாறு கடலுணவுகளை பதப்படுத்தி அவற்றை ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்த ஏற்றுமதி சார்ந்து 200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் சில வெளிநாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் கடலுணவு கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றன. கடலில் இருந்து கரைக்கு பிடித்து வரப்படும் கடலுணவுகளை உள்ளூர் தரகர்களுக்கு பணத்தை கொடுத்து, கடலுணவுகளை பெற்று, தமது நாட்டில் வைத்து பதப்படுத்தி ஏற்றுமதிகளை மேற்கொள்கின்றது. இதனால் இந்தத் தொழிலை நம்பியுள்ள உள்ளூர் ஊழியர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இது உத்தியோகபூர்வமற்ற முறையில் இட்மபெறுவதால், யார் இதனை செய்கின்றனர்? என்பது மறைவாகவுள்ளது. ஆகவே இதனை உடனடியாக கவனத்தில் எடுத்து, இந்த சட்டவிரோத ஏற்றுமதிக்கான உள்ளீடு கொள்வனவை தடுத்து நிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்;டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோரினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X