2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடலாமையை வெட்டிய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 நவம்பர் 12 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. அரசரட்ணம்

சட்டவிரோதமாக் கடலாமையைப் பிடித்து வெட்டிய மீனவர்கள் நால்வரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்ட ஊர்காவற்றுறை பதில் நீதவான், அவ் வழக்கை ஒத்திவைத்தார்.

மண்டைத்தீவுக் கடற்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (11), ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், ரோலர் படகு ஒன்றைச் சோதனையிட்டனர்.

இதன்போது, குறித்த படகுக்குள் உயிருள்ள ஆமை மற்றும் ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டதையடுத்து, குருநகரைச் சேர்ந்த மீனவர்கள் நால்வரையும் கைதுசெய்த கடற்படையினர். யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று (11), குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீட்கப்பட்ட உயிருள்ள ஆமையைக் கடலில் விடும்படியும் ஆமை இறைச்சியை அழிக்குமாறும் நீதவான் இன்போது உத்தரவிட்டார்.

குறித்த மீனவர்களின் படகு, கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X