2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கடலாமையை வைத்திருந்தவர் கைது

George   / 2016 மார்ச் 11 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
குருநகர் தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடலாமையை மறைத்து வைத்திருந்த சந்தேகநபரை வியாழக்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஸ்ரீகஜன், இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

இறைச்சியாக்கும் நோக்கத்தோடு குறித்த கடலாமையை சந்தேகநபர் தனது வீட்டில் மிகவும் கொடூரமான முறையில் கட்டி வைத்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், கடலாமையினை பாதுகாப்பாக மீட்டனர்.

மீட்கப்பட்ட ஆமை 27 கிலோகிராம் நிறையுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X