2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கடலில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநகர் கடற்கரையில் இருந்து 25 மீற்றர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருந்து கடலுக்குள் குதித்து விளையாடிய சிறுவன், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், ஞாயிற்றுக்கிழமை(24) இடம்பெற்றுள்ளது.

குருநகர், தொடர்மாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த, ரூபன் அன்ரனி போட் கீர்த்தனன் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரு சிறுவர்கள் ஆழம் குறைந்த பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த படகு ஒன்றில் ஏறி கடலுக்குள் குதித்து விளையாடியுள்ளனர்.

இதன்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்து குறித்த சிறுவனை, அலை இழுத்து சென்றுள்ளது.

இதையடுத்து, குறித்த சிறுவன் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்;பட்ட போதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X