Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூன் 29 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை கடற்பரப்பினுள் நுழைந்து, சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த மூன்று பேரை, காங்கேசன்துறை வடக்கு கடற்படையினர், செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளனர்.
கைதான மூவரில் இருவர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர், மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர்களிடம் இருந்து 1 டிங்கி ரக படகு, 929 கடலட்டைகள், 10 ஒக்சிசன் சிலிண்டர்கள், சுழியோடி பயன்படுத்தும் இரு முகமூடிகள், சுழியோட பயன்படுத்தும் இரண்டு காலணிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான மூவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
11 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago