2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வுகள்

Sudharshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2015ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட கண்காட்சயின் இறுதி நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது.

'செய்வோம் செய்விப்போம்' என்ற தொனிப்பொருளில்  இக்கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் மாகாணத்தின் 34 பிரதேச செயலக பிரிவுகளும் கலந்துகொண்டு தமது ஆக்கங்களை காட்சிப்படுத்தியதோடு விற்பனையும் செய்தனர். கண்காட்சியை ஆர்வமுடன் ஒழுங்கு செய்த மாகாண பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் , கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து மாவட்ட அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தனது விசேட பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்  அதன்போது தெரிவித்தார்.

இறுதிநாள் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த வியாழக்கிழமை (03) கண்காட்சி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .